Tuesday, May 09, 2006

வேதாளம்

கல்லூரியில் மைதானத்தையே பார்க்காமல் நாற்பதில் மராத்தன் முடிக்கும் நண்பன்

மகனை உயர்நிலைப்பள்ளியில் விட்டு பரதம் பயிலும் தாய்

உலகமெல்லாம் சுற்றும்போதும் தினம் ஒரு கவிதை எழுதும் மேலாளர்

வருடத்துக்கு ஒரு புதுமொழி கற்கும் மென்போருள் நிபுணர்

குடியே முழுகினாலும் பங்குச்சந்தையை விடாக்கண்டர்

ஓய்வு பெற்றுவிட்டு விமானமோட்டப் பழகும் மாமா

பத்து மணிநேரம் குழந்தைகளை கவனித்துவிட்டு வந்து பந்துவராளியை பந்தாடும் மருத்துவர்

இருபதாம் தேதியைக் காட்டி மிரட்டும் இவ்வலைத்தளத் தலைவி

மகனுடன் முதுகலை தொழில் நிர்வாகம் படிக்கும் அன்னை

தொடக்கப்பள்ளி மகனுடன் கராத்தே துவங்கும் தந்தை

இவ்விக்கிரமங்களால் சற்றும் தளராமல் முருங்கையில்

சிவனே என்றிருக்கும் நான்!

1 comments:

said...

பண்ரூட்டியாரே அதுதான் நீங்க பதிவுகளை எழுத ஆரம்பித்து விட்டீட்களே அப்புறம் என்ன கவலை இதுல புகுந்து கலக்குங்க.
டெம்ளேட் ப்ற்றி சொன்னதுக்கு நன்றி என்ன ஏதுன்னு பாக்குறேன்.