Saturday, September 09, 2006

சீவக சிந்தாமணி (ஒலி வடிவில்)

எல்லாரும் இப்படி குந்துங்க! பாஸ்டன் பாலாவோட அம்மா சீவக சிந்தாமணி கத சொல்றாங்களாம், கேப்போம்!

குந்தியாச்சா? சின்னப் பசங்கல்லாம் ஜோரா ஒருதர கை தட்டுங்க!

சரி - இனிமே சத்தம் போடாமே, குறுக்க குறுக்க பேசாமே, ஊங்கொட்டாமெ இங்கே கிளிக்கவும்!
அத கேட்டுட்டு அப்பறமா இங்கே கிளிக்கவும்!

To listen to Seevaga Chinthamani, click here! And then here!!

ஆயிரம் ஆண்டுகள் சென்றால்....

இன்னும் ஆயிரம் ஆண்டுகள் சென்றால், உலகில் என்ன மாற்றங்கள் இருக்கும் என்று ஒருவர் கேட்கிறார்(இங்கே கிளிக்கவும். வர வர எது லிங்க்குன்னே தெரியலை. குருடர்கள் தரையை தட்டிக் கொண்டே போவதுபோல மவுஸால் தடவிக் கொண்டே போகவும்).


எனது பட்டியல்

1. தமிழர்கள் ஆங்கிலத்தை மறந்திருப்பார்கள்.
2. இந்தியாவில் சாதி அடிப்படை அரசியல் மாறாதிருக்கும்.
3. அமெரிக்கா அல் கய்டாவின் தலைவரை தேடிக்கொண்டிருக்கும்.
4. இந்தியா ஒலிம்பிக்ஸில் ஒரு தங்கப் பதக்கம் வாங்கும்.
5. சென்னை கார்ப்பரேஷன் ரோட்டில் சாக்கடை சரி செய்ய பள்ளம் தோண்டி தவறாக ஒரு வயரை வெட்டினால், அமெரிக்க பங்கு சந்தை ஸ்தம்பிக்கும்.
6. ராத்திரி உணவுக்கு பீட்ஸா வேண்டுமென்று நினைத்தாலே போதும். வீட்டு கம்ப்யூட்டர் வீட்டுக்கே வரவழைத்துவிடும். பெங்களூரில் அடுத்த வருடம் டிரையல்.
7. பாலஸ்தீனப் பிரச்னை தீராது.
8. தமிழ்நாடு தென்னமெரிக்க உளுந்து மற்றும் புளி கார்ட்டெல் மிரட்டலுக்கு நடுங்கும்.
9. சில மனிதர்கள் செயற்கையாக ஆயிரம் ஆண்டு வாழ வைக்கப் படுவார்கள்(மற்ற யாருக்கும் COBOL தெரியாததால்)
10. Y3K ஒரு பிரச்னையாக இருக்காது
11. இந்தியத் திரைப் படங்களில் கம்ப்யூட்டர் மவுஸ் அமுக்கி சண்டை போடுவார்கள்.
12. பத்து ஆண்டுகளுக்கு முன்னால், கூகுள் கம்பெனி குரங்குத் தொல்லையால் திவாலாகி இருக்கும்.
13. இதை இன்னும் படித்துக் கொண்டிருந்தால், உங்களுக்கு ஒரு வாழ்க்கை தேவைப்படுகிறது(அதாங்க - Get a life!)

Thursday, August 03, 2006

உபயம்

சமீபத்தில் ஒரு நண்பன் இந்தியா செல்லவிருந்ததால், அவன் ஊரில் இல்லாதபோது தீர்க்க வேண்டிய கணக்குக்கு பணம் கொடுத்தான். நான் வேடிக்கையாக அந்த பணத்துக்கு மேசை நாற்காலி வாங்கி 'உபயம் அவன் பெயர்' என்று எழுதிவிடுகிறேன் என்றேன்.

அதை கேட்டுக் கொண்டிருந்த என் மகன் சொன்னான். "I get it Daddy. உபயம் stands for U buy 'em!!!"

Tuesday, May 09, 2006

குளிர்காலம்

பளீரென சிரிக்கும் வசந்த காலம்
போலிருக்கும் உன் பேச்சு.

இப்போதோ உறைந்து போன குளத்தின் மீது சிறுவர்
விட்டெறிந்த கற்கள் போல கனக்கிறது உன் மௌனம்.

எப்பொழுது பனி இளகும் என காத்திருக்கிறேன்.

தொலைந்து போன கடிதங்கள்



கரிசனத்துடன் எழுதும் அப்பாவின் கடிதம்

புத்தி சொல்லும் அண்ணனின் வார்த்தைகள்

ஆவலுடன் காத்திருக்கும் மனைவி

எப்போது வருவாய் எனும் மகனின் வினா

குடித்துவிட்டு எழுதும் நண்பனின் உளறல்

அவருக்கே புரியாத மாமனாரின் காக்காய் கிறுக்கல்

ஜிலேபி என்றழைக்கப்படும் கல்லூரித் தோழனின் பிழியல்

கல்லூரித் தோழியின் கிட்டத்தட்ட காதல் வரிகள்

தாத்தாவின் பாசக்குழைவு

பொங்கலுக்கு வந்து குவியும் வாழ்த்துக்கள்

தொலைபேசித் தூரத்தாலும் இணையத்தாலும்

இவை அனைத்தையும் தொலைத்த நாம்.

வேதாளம்

கல்லூரியில் மைதானத்தையே பார்க்காமல் நாற்பதில் மராத்தன் முடிக்கும் நண்பன்

மகனை உயர்நிலைப்பள்ளியில் விட்டு பரதம் பயிலும் தாய்

உலகமெல்லாம் சுற்றும்போதும் தினம் ஒரு கவிதை எழுதும் மேலாளர்

வருடத்துக்கு ஒரு புதுமொழி கற்கும் மென்போருள் நிபுணர்

குடியே முழுகினாலும் பங்குச்சந்தையை விடாக்கண்டர்

ஓய்வு பெற்றுவிட்டு விமானமோட்டப் பழகும் மாமா

பத்து மணிநேரம் குழந்தைகளை கவனித்துவிட்டு வந்து பந்துவராளியை பந்தாடும் மருத்துவர்

இருபதாம் தேதியைக் காட்டி மிரட்டும் இவ்வலைத்தளத் தலைவி

மகனுடன் முதுகலை தொழில் நிர்வாகம் படிக்கும் அன்னை

தொடக்கப்பள்ளி மகனுடன் கராத்தே துவங்கும் தந்தை

இவ்விக்கிரமங்களால் சற்றும் தளராமல் முருங்கையில்

சிவனே என்றிருக்கும் நான்!